விவசாயப் பொருட்களை சர்வதேச அளவில் விளம்பரப்படுத்த ரூ. 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
விவசாயப் பொருட்களை விளம்பரப்படுத்த ரூ. 10 ஆயிரம் கோடி- நிர்மலா சீதாராமன்
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 12-ம் தேதி நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது, பொருளாதாரத்தை மீட்கும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அமல்படுத்தப்படும் என அறிவித்தார்.
இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களுக்கு ‘தன்னிறைவு இந்தியா’ என்ற பெயரில் பல கட்டங்களாக நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
*இந்திய விவசாயப் பொருட்களை சர்வதேச அளவில் விளம்பரப்படுத்த ரூ. 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* இந்த நிதி மூலம் சிறு தானியங்கள், ஆர்கானிக், மூலிகை பொருட்களுக்கு விளம்பரம் செய்யப்படும்.
*மீன்வளத்துறைக்கு ரூ. 20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.
இவை ரூ. 11 ஆயிரம் கோடி மீனவர் நலனுக்காகவும், ரூ 9 ஆயிரம் கோடி மீன்வளத்துறை கட்டமைப்புக்காகவும் ஒதுக்கீடு செய்யப்படும்.