இரண்டு வாரங்களில் லண்டனில் கொரோனாவே இல்லாத நிலை உருவாகும்!!!

Spread the love

லண்டனில் ஒரு நாளில் 24 பேருக்கும் குறைவானவர்களே கொரோனா தொற்றுக்கு ஆளாவதால் இன்னும் சில வாரங்களில் கொரோனா ஒழிக்கப்பட்டுவிடும் என புதிய புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது.

லண்டன்

ஒரு காலகட்டத்தில் இங்கிலாந்திலேயே மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்த நகரம் லண்டன் , இன்று மற்ற பகுதிகளை விட ஜூன் மாதத்திற்குள் கொரோனாவே இல்லாத நிலையை எட்ட இருக்கிறது.

ஊரடங்கு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே பொது போக்குவரத்தில் சமூக விலகல் கட்டுப்பாடுகளை பின்பற்றியதால் மற்ற நகரங்களைவிட லண்டன் விரைவாக கொரோனாவிலிருந்து விடுபட்டு வருவதாக நம்பப்படுகிறது.

லண்டனைப் பொருத்தவரை மார்ச் 23 இல் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 213,000ஆக இருந்தது, இரண்டு வார ஊரடங்கிற்குப் பின் ஏப்ரல் 7 அன்று 10,000 ஆக சரிந்தது. லண்டனிலுள்ள சுமார் 15 சதவிகிதம் பேர் ஏற்கனவே நோய்த்தொற்றுக்கு ஆளாகிவிட்டதால், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிவிட்டது, எனவே மீண்டும் வைரஸ் பரவுவது கடினம் என்கிறார்கள் நிபுணர்கள்.

பெரும்பாலானோர் வீடுகளில் இருந்த வண்ணம் வேலை பார்க்க தொடங்கினர் அவர்களால் வீடுகளில் இருந்தவண்ணமே தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள முடிந்ததும் கொரோனா பரவாமல் தடுக்கப்பட்டதற்கு இன்னொரு காரணமாக கருதப்படுகிறது. இன்னும் இரண்டு வாரங்களில் லண்டனில் கொரோனாவே இல்லாத நிலை உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page