“வாயை மூடி பேசவும்” கொரோனா பேச்சு வழியாக பரவக்கூடும்- ஆய்வில் தகவல்

Spread the love

“வாயை மூடி பேசவும்” கொரோனா பேச்சு வழியாக பரவக்கூடும் என ஆய்வில் தெரியவந்து உள்ளது.

வாஷிங்டன்

நோயாளிகள் பேசும் போது கொரோனா பரவுவது குறித்து அமெரிக்காவின் தேசிய நீரிழிவு மற்றும் செரிமான மற்றும் சிறுநீரக நோய்கள் (என்ஐடிடிகே) ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் முடிவுகள் அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமியின் (பிஎன்ஏஎஸ்) புரோசிடிங்ஸ் இதழில் வெளியிடப்படடு உள்ளது.

ஆய்வில் ஒரு நபர் மூடிய பெட்டியின் உள்ளே 25 விநாடிகள் “ஆரோக்கியமாக இருங்கள்” என்ற சொற்றொடரை சத்தமாக மீண்டும் மீண்டும் சொன்னார்கள்.பெட்டியில் பொருத்தப்பட்ட்ட ஒரு லேசர் நீர்த்துளிகளை ஒளிரச் செய்து, அவற்றைக் காணவும் எண்ணியும் ஆய்வு செய்யப்பட்டது. நீர்த்துளிகள் அவைகள சராசரியாக 12 நிமிடங்கள் காற்றில் தங்கியிருந்தன,

ஒரு நபர் பேசும் போது உருவாகும் மைக்ரோ நீர்த்துளிகள் சுமார் 12 நிமிடங்களுக்கும் மேலாக ஒரு மூடப்பட்ட இடத்தில் காற்றில் தங்கி இருக்கும்,

உமிழ்நீரில் கொரோனா வைரஸின் செறிவை கணக்கில் எடுத்துக்கொண்டு, விஞ்ஞானிகள் ஒவ்வொரு நிமிடமும் சத்தமாக பேசினால் 1,000 க்கும் மேற்பட்ட வைரஸ் கொண்ட நீர்த்துளிகள் எட்டு நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் மூடிய இடத்தில் காற்றில் இருக்கும் என மதிப்பிட்டு உள்ளனர்.

“இந்த நேரடி காட்சிப்படுத்தல் சாதாரண பேச்சு வான்வழி நீர்த்துளிகளை எவ்வாறு உருவாக்குகிறது என்பதை நிரூபிக்கிறது. அவை பல்லாயிரம் நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் நிறுத்தி வைக்கப்படலாம், மேலும் அவை வரையறுக்கப்பட்ட இடங்களில் நோயைப் பரப்பும் திறனைக் கொண்டுள்ளன” என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page