ஆட்சியில்லாதபோதே தலைமை செயலாளரிடம் தி.மு.க .வினர் திட்டமிட்ட அத்துமீறல்கள் கண்டனத்துக்குரியது என்.ஆர்.தனபாலன் அறிக்கை
சென்னை –
ஆட்சியில்லாதபோதே தலைமை செயலாளரிடம் தி.மு.க .வினர் திட்டமிட்ட அத்துமீறல்கள் கண்டனத்துக்குரியது என்று பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் கூறியுள்ளார் .இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
நாடு முழுவதும் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் ஆச்சியாளர்களும் அரசு அதிகாரிகளும் ,உலக சுகாதார மையம் ,மத்திய சுகாதார மையம் மற்றும் சிறப்பு மருத்துவ குழுவினரின் ஆலோசனைகளை கேட்டு அதற்கு பிறகு அரசு அதிகாரிகளின் ஆலோசனைகளையும் கேட்டு அதற்கு தகுந்தவாறு அரசு கொரானாவிற்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் வேளையில்
எதிர்கட்சிகளுக்கு அரசியல் செய்வதற்கு இடம்மில்லாமல் போய்விட்டது .இதனை நன்கு தெரிந்துகொண்ட தி.மு.கவேண்டுமென்றே திட்டமிட்டு தலைமை செயலாளரிடம் வம்புக்கு எழுக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் கொடுக்க வருவதாக கூறி தலைமை செயலகம் சென்று தி.மு.க எம் .பிக்கள் டி .ஆர் .பாலு ,தயாநிதிமாறன் மற்றும் தங்களுடன் 20 பேரையும் அழைத்து சென்று தலைமை செயலாளரை பணி செய்யவிடாமல் அவரது அறைக்குள் சென்று போட்டோ எடுப்பதும் ,வீடியோ எடுப்பதும் போன்ற அநாகரிக செயல்களில் ஈடுபட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது .
இருந்தபோதிலும் 1 லச்சத்திற்கான மேலான கோரிக்கை மனு என்கிற பெயரில் கட்டுகளை கொண்டு கொடுத்து இதற்கு எந்த தேதிக்குள் தீர்வு காண்பீர்கள் என தேதியை கேட்டு விதண்டாவாதம் செய்தது எந்தஒரு நாகரீகமான அரசியல்வாதியும் செய்யும் காரியமில்லை .அதிலும் முன்னாள் மத்திய
அமைச்சர்களாக டி .ஆர் .பாலு ,தயாநிதிமாறன் போன்ற மூத்த அரசியல்வாதிகள் தலைமை செயலாளர் போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்களிடம் செய்யக்கூடிய காரியமில்லை என்பதை அறிவு சார்ந்த எவரும் உணருவார்கள்.
மேலும் வெளியில் பத்திரிகையாளர் சந்திப்பில் நாங்கள் என்ன சொல்ல வேண்டும் அப்படி சொல்லட்டுமா ? அல்லது இப்படி சொல்லட்டுமா ? என்று தலைமை செயலாளரை மிரட்டும் பாணியில் நடந்துகொண்டது எந்த வகையில் நியாயம் ? எதிர்க்கட்சிகள் நாடாளுமற்ற உறுப்பினர் என்கிற போர்வையா ? அல்லது முன்னாள் மத்திய அமைச்சர் என்கிற போர்வையா ? தமிழக அரசின் கொரோனா தடுப்பு முயற்சிகளுக்கு முன்னாள் தி .மு .க .வின் அரசியல் நாடகம் ஒருபோதும் எடுபடாது .
மக்கள் மத்தியில் கொரானாவிற்கு எதிரான நடவடிக்கையில் தமிழக அரசின் மீதுள்ள நன்மதிப்பு தினம் தினம் உயர்ந்து வருவதை கண்டு பொறுத்துக்கொள்ளமுடியாத தி .மு .க .திட்டமிட்டு தலைமை செயலாளர் அறையில் அத்துமீறி நடந்து கொண்ட விதம் வருத்தமளிக்கிறது
.இதுபோன்ற அநாகரீக செயல்களில் ஈடுபடும் போது தி .மு .க இன்னும் தேய்ந்து கொண்டே எதிர்கட்சி அந்தஸ்த்தையும் அடுத்து தேர்தலில் இழக்க நேரிடும்.
மேலும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தயாநிதிமாறன் எம் .பி .பேசும்போது சாதிய அடிப்படையில் பேசியிருப்பது சிறிதும் ஏற்புடையதல்ல .நாகரீக் அரசியலில் எதிர்கட்சி தலைவர்கள் பேசுகிறபோது மிகவும் கவனமாக பேசவும் கண்ணியத்துடன் நடந்துகொள்ளவும் கற்றுக்கொள்ள வேண்டும். யாருடைய மனதையும் புண்படாமல் பார்த்து நடந்துகொள்வதே நாகரீகமான அரசியலாகும் .
பொதுமக்களை நேரில் சந்தித்து கொரோனா ஊரடங்கில் முடங்கியுள்ள மக்களுக்கு உதவி செய்ய முடியாத தி .மு .க தினமும் அரசுக்கு எதிரான அறிக்கைகளையும் ,நடவடிக்கைகளையும் மட்டுமே செய்து வருகிறது .இதனால் தமிழக மக்கள் மனதில் ஒருபோதும் இடம்பிடிக்க முடியாது .
தமிழக அரசின் சிறப்பான ஏர்ப்பாடுகளையும்,நடவடிக்கைகளில் குறை சொல்லுவதை மட்டுமே வழக்கமாக தி .மு .க கொண்டுள்ளது .இதை தவிர்த்து ஆரோக்கியமான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் .ஆட்சியில் இல்லாத நேரத்திலும்கூட தி .மு .க இதுபோன்று நடந்துகொண்டால் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிட்டால் தமிழக மக்கள் படும் துன்பத்திற்கு அளவேயில்லாமல் போய்விடும் .இவ்வாறு பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன்தனது அறிக்கையில் கூறியுள்ளார் .