தென்காசி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் 60-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென்காசியில் இன்று 8 பேருக்கு கொரோனா உறுதி
தென்காசி:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10,108 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 2,599 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 ஆயிரத்து 435 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5,946 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தென்காசி இன்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் 60-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.