கொரோனா ஊரடங்கால் இந்த பணிகளும் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக விரைவில் பஸ்கள் இயக்கப்பட உள்ளதால் பஸ் நிலைய விரிவாக பணிகளும் நடைபெற்று வருகின்றன.
ஊரடங்கு தளர்வால் திண்டுக்கல்லில் நிறுத்தப்பட்டிருந்த சாலை, பாலப்பணிகள் தொடக்கம்
திண்டுக்கல்:
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 25ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் முடங்கினர். கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டன. அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் மட்டுமே செயல்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக முடங்கியது.
3-ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் நிறைவு பெறுவதால் 34 வகையான கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்தது. மேலும் அரசுத்துறை அலுவலகங்கள் செயல்படவும், அரசின் திட்டப் பணிகள் நடைபெறவும் அனுமதி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து கொரோனாவால் நிறுத்தப்பட்ட பல்வேறு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. திண்டுக்கலில் அரசு பஸ் நிலையம் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கொரோனா ஊரடங்கால் இந்த பணிகளும் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக விரைவில் பஸ்கள் இயக்கப்பட உள்ளதால் பஸ் நிலைய விரிவாக பணிகளும் நடைபெற்று வருகின்றன.
பஸ் நிலையத்தில் காங்கிரீட் தளங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.மேலும் பல்வேறு இடங்களில் சாலை பணிகளும் நடைபெற்று வருகின்றன.
மாவட்டத்தில் பல இடங்களில் நடைபெற்று வந்த பாலம் பணிகளும் மீண்டும் தொடங்கி உள்ளது.