வருசநாடு அருகே உள்ள மஞ்சனூத்து பகுதியை சேர்ந்த வாலிபருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இவர் மும்பையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இதை தொடர்ந்து அவரை போடியில் தனிமைப்படுத்தி கண்காணித்தனர்.
வருசநாடு அருகே மும்பையில் இருந்து வந்த வாலிபருக்கு கொரோனா
வருசநாடு:
கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் உள்ள பலர் சொந்தஊருக்கு வந்தவண்ணம் உள்ளனர். தேனி மாவட்டத்திற்கு மும்பையில் இருந்து 19 பேர் நேற்று ஒரு வேனில் வந்தனர்.
இவர்களுக்கு தேவதானப்பட்டி அருகே காட்ரோடு சோதனைச்சாவடியில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது வருசநாடு அருகே உள்ள மஞ்சனூத்து பகுதியை சேர்ந்த வாலிபருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இவர் மும்பையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இதை தொடர்ந்து அவரை போடியில் தனிமைப்படுத்தி கண்காணித்தனர். பின்பு அவர் தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதைதொடர்ந்து மஞ்சனூத்து பகுதியில் போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். மேலும் வெளியிடங்களில் இருந்து யாரும் இப்பகுதிக்கு வருகிறார்களா எனவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மஞ்சனூத்து வாலிபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.