நான்கு நிபந்தனைகளுடன் மாநில அரசுகளின் கடன்பெறும் உச்சவரம்பை 5 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மாநில அரசுகளின் கடன்பெறும் உச்சவரம்பு 5 சதவீதமாக உயர்த்த முடிவு: நிர்மலா சீதாராமன்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மாநில அரசுகளின் கடன்பெறும் உச்சவரம்பை 3-ல் இருந்து 5 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்று பல்வேறு மாநில அரசுகள் கோரிக்கை விடுத்தன.
இதுகுறித்து இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில் ‘‘மாநில அரசுகளின் கடன்பெறும் உச்சவரம்பு 3-ல் 5 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் அரை சதவிகிதம் கடன் வாங்க எந்த கட்டுப்பாடும் கிடையாது.
அடுத்த 1 சதவிகிதம் (3.5-ல் இருந்து 4.5) கடன் வாங்கும் பணத்தில் ஒரே நாடு ஒரே ரேசன், மின்சார பங்கீடு உள்ளிட்ட நான்கு துறைகளுக்கு பயன்படுத்த வேண்டும். இதில் மூன்று துறைகயில் பயன்படுத்தினால் மட்டுமே கடைசி அரை (.5) சதவிகிதம் கடன் வாங்க அனுமதி வழங்கப்படும். இந்த கடன் பெறும் வசதி 2020-2021-ம் ஆண்டுக்கு மட்டுமே’’ என்றார்.
இதன் மூலம் மாநில அரசுகள் கூடுதலாக 4.28 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற முடியும்.