49 லட்சத்தை கடந்த வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை

Spread the love

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 49 லட்சத்தை கடந்தது.

49 லட்சத்தை கடந்த வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை

ஜெனீவா:

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ளது.

இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் கொரோனா பரவு வேகமும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்னிக்கை 49 லட்சத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 49 லட்சத்து 10 ஆயிரத்து 671 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 26 லட்சத்து 71 ஆயிரத்து 73 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 44 ஆயிரத்து 769 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

இந்த கொடிய வைரசில் இருந்து 19 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 3 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகளின் விவரங்கள்:-

அமெரிக்கா – 15,50,539
ரஷியா – 2,99,941
ஸ்பெயின் – 2,78,188
பிரேசில் – 2,55,368
இங்கிலாந்து – 2,46,406
இத்தாலி – 2,25,886
பிரான்ஸ் – 1,79,927
ஜெர்மனி – 1,77,289
துருக்கி – 1,50,593
ஈரான் – 1,22,492
இந்தியா – 1,01,139
பெரு – 94,933
சீனா – 82,960
கனடா – 78,072
சவுதி அரேபியா – 57,345
பெல்ஜியம் – 55,791

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page