தமிழகத்தில் ஊரடங்கு விதிமீறல்; 4.92 லட்சம் பேர் கைது

Spread the love

தமிழகத்தில் ஊரடங்கு விதிமீறலில் ஈடுபட்ட 4.92 லட்சம் பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சென்னை,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வருகிற 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனினும், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி மக்களில் பலர் தேவையின்றி வாகனங்களில் வெளியே சுற்றி வருகின்றனர். அத்தகைய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வாகனங்களில் சுற்றினால், அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்படுகிறது.

இந்த நிலையில், 144 தடை உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 92 ஆயிரத்து 981 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஊரடங்கு உத்தரவை மீறியதாக 4 லட்சத்து 65 ஆயிரத்து 241 வழக்குகள் இதுவரை பதிவாகியுள்ளன.

தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 3 ஆயிரத்து 777 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை ரூ.6.39 கோடி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் கடந்த ஏப்ரல் 16ந்தேதி முதல் திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page