மராட்டியத்தில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 1,249 ஆக உயர்வு

Spread the love

நாட்டிலேயே கொரோனா பாதிப்புக்கு மராட்டியத்தில் பலி எண்ணிக்கை 1,249 ஆக உயர்வடைந்து உள்ளது.

புனே,

இந்தியாவில் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நாட்டில் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு வரும் 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனினும், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. பொதுமக்கள் ஊரடங்கு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். எனினும், கடந்த 4ந்தேதியில் இருந்து நாடு முழுவதும் பல இடங்களில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

நாட்டிலேயே மராட்டியத்தில் அதிக அளவு கொரோனா பாதிப்பு உள்ளது. இதுவரை 35 ஆயிரத்து 58 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. பலி எண்ணிக்கை 1,198ல் இருந்து 1,249 ஆக உயர்ந்து உள்ளது. 8 ஆயிரத்து 437 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்ட நிலையில், வீடு திரும்பி உள்ளனர்.

இந்தியாவில், அருணாசல பிரதேசம் (ஒருவர்), அந்தமான் நிகோபார் தீவுகள் (33 பேர்) மற்றும் மிசோரம் (ஒருவர்) ஆகியவை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு முழு அளவில் விடுபட்டு உள்ளன.

மராட்டியத்திற்கு அடுத்து பலி எண்ணிக்கையில் குஜராத் 2வது இடத்திலும் (694), மத்திய பிரதேசம் 3வது இடத்திலும் (252), மேற்கு வங்காளம் 4வது இடத்திலும் (244) மற்றும் ராஜஸ்தான் 5வது இடத்திலும் (138) உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page