புதுடில்லி:
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பிக்களை வரும் 31 ம் தேதி பதவியேற்க திட்டமிடப்பட்டு வருகிறது.
இன்று (25 ம் தேதி)முதல் உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதன்பின்னர் வரும் 31 ம் தேதி ராஜ்யசபாவிற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களை பதவியேற்க வைக்க திட்டமிடப்பட்டு வருகிறது.
17 மாநிலங்களில் 55 ராஜ்யசபா இடங்கள் காலியானது. இதில் 37 எம்.பிக்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மேலும் 18 இடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.இந்நிலையில் வெற்றி பெற்ற எம்.பிக்களை பதவியேற்க அழைத்து வருவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராயும் படி ராஜ்யசபா துணை தலைவர் வெங்கையா நாயுடு சபை செயலகத்திடம் கேட்டுகொண்டுள்ளார்.
அதேநேரத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் எம்.பிக்களை இரண்டு மற்றும் மூன்று பேட்சுகளாக அழைக்கலாம் எனவும், எம்.பிக்களின் எந்த ஒரு குடும்ப உறுப்பினர்களும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே ராஜ்யசபா தலைவரும் , துணை சபாநாயகருமான வெங்கயைாநாயுடு, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் இது குறித்து ஆலோசனை நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 4-ம் கட்ட ஊரடங்கு வரும் 31 ம்தேதி வரையில் நீட்டிக்கப்பட்டு இருப்பதால் அது வரையில் காத்திருப்பது என முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.