திருநெல்வேலி:
கொரோனா வார்டில் மருந்துகள் வழங்க இரண்டு ரோபோக்கள் வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கொரோனா வார்டில் 192 நோயாளிகள் உள்ளனர்.
மருந்துகள், உணவுபொருட்கள் வழங்க சபிகோ எனும் இரண்டு ரோபோக்கள் வழங்கப்பட்டுள்ளன.தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலையும், திருச்சி ப்ரோபெல்லர் டெக்னாலஜி நிறுவனமும் இணைந்து இதனை உருவாக்கியுள்ளனர்.ஒவ்வொன்றும் மதிப்பும் ரூ ஒரு லட்சமாகும்.
திருநெல்வேலியில் இதனை வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜலட்சுமி, கலெக்டர் ஷில்பா,மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் தச்சை கணேசராஜா, நாங்குநேரி எம்.எல்.ஏ.,நாராயணன், டீன் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஒவ்வொரு ரோபாவிலும் 3 அடுக்குகள் உள்ளன. இவற்றின் மூலம் வார்டு முழுவதும் மருந்துகள், உணவுபொருட்கள் விநியோகிக்கலாம். அதில் தெர்மல் சென்சார் கருவி, கேமரா பொருத்துவதன் மூலம் நோயாளியை கண்காணிக்க முடியும்.