சென்னை:
கொரோனா அச்சம் காரணமாக பிற மாவட்ட கட்டுமான பணியாளர்கள் சென்னை வர தயங்குவதால் கட்டுமான துறையினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
வெளி மாநில தொழிலாளர்கள் ஒட்டுமொத்தமாக சொந்த ஊர்களுக்கு திரும்பியதால் பெரும்பாலான கட்டுமான திட்டங்கள்முடங்கியுள்ளன. இதுகுறித்து கட்டுமான துறையினர் கூறியதாவது: வெளி மாநில தொழிலாளர்கள் இல்லாததால் உள்ளூர் பணியாளர்களை பயன்படுத்த தயாராக இருக்கிறோம். இதற்கான கூடுதல் செலவையும் ஏற்க கட்டுமான நிறுவனங்கள் தயாராக உள்ளன.
ஆனால் சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு கூட பணியாளர்கள் வர தயங்குகின்றனர். வெளியூர்களில் இருந்து அழைத்து வர தயாராக இருந்தாலும் பணியாளர்களின் தயக்கம் காரணமாக கட்டுமான துறைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.