பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் தனிமைப்படுத்தைலை தவிர்த்த சம்பவம் சர்ச்சயை உருவாக்கியது. இதனையடுத்து மாநில அரசு புதிய விதியை அமல்படுத்தியது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மத்திய அரசு கடந்த மார்ச் 25 ம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் வரும் 31 ம் தேதி வரையில் ஒரு சில தளர்வுகளுடன் 4-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஒரு சில துறைகளில் உள்நாட்டு போக்குவரத்து துறையும் ஒன்று.
தொற்றால் பாதிக்கப்பட்ட கர்நாடக மாநில அரசு,மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு மற்றும் டெல்லி உள்ளிட்ட தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் இருந்து சாலை ரயில் மூலம் வருபவர்களுக்கு வரும் 31 ம் தேதி வரை அனுமதி கிடையாது என அறிவித்திருந்தது. மேலும் விமானம் மூலம் வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என கூறி இருந்தது.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் சதானந்த கவுடா . பா.ஜ.,வை சேர்ந்த இவர் ராசாயணம் மற்றும் உரத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். மாநிலத்தி்ல உள்நாட்டு போக்குவரத்து துவங்கிய உடன் புதுடில்லியில் இருந்து பெங்களூரு வந்தார்.
விமானம் மூலம் வரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் செய்யப்படுவர் என்று இருக்கும் நிலையில் அமைச்சர் விமானநிலையத்தில் இருந்து தனி கார் மூலம் புறப்பட்டு சென்றார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. மாநில எதிர்கட்சியான காங்கிரஸ் அரச விதித்துள்ள விதிகளுக்கு யாருக்கும் விலக்கு இல்லை, அவ்வாறு இருக்கையில் விதிகளை மீறி செயல்பட்ட அமைச்சர் மீது ஏன் எந்த நடவடிக்கையும் இல்லை என குற்றம் சாட்டியது.
இதனையடுத்து அமைச்சர் அளித்துள்ள விளக்கத்தில் தனிமைப்படுத்தல் குறித்த வழிகாட்டுதல்கள் அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தும், சிலருக்கு சில விலக்குகள் உள்ளன.
அமைச்சராக இருப்பதால், எனக்கு மாநில அரசாங்கமும் மத்திய அரசும் விலக்கு அளித்துள்ளன என்று அவர் கூறினார், மேலும் மத்திய அரசின் ஆரோக்யா சேது ஆப்-ஐ தனது தொலைபேசியில் வைத்திருப்பதாக கூறினார். நான் மருந்து துறை பிரிவை கவனித்து வருகிறேன். நாட்டில் மருந்து விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது எனது கடமை. அவ்வாறு செய்யாவிட்டால், தொற்று எண்ணிக்கை இரட்டிப்பாகும். டாக்டர்கள் தனிமைப்படுத்தப்பட்டால், மருந்து வழங்குபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டால், எப்படி வைரஸை வெல்ல முடியும் என குறிப்பிட்டார்.
பாஜ., செய்தி தொடர்பாளர் பிரகாஷ் கூறுகையில் அமைச்சர் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியதாக தெரிவித்தா்ர.
இதனையடுத்து மாநில அரசு புதிய விதியை அமல் படுத்தியது அதில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் அமைச்சர்கள் அல்லது மாநிலம் முழுவதும் பயணிக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் , மற்றவர்களுக்கு செய்யப்பட்டு இருக்கும் தனிமைப்படுத்தல் தேவைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.