கேரள அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் வெளிமாநிலங்களில் இருந்து புலம் பெயர் தொழிலாளர்களுக்கான ரெயில்களை அனுப்புவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் இதுவரை மொத்தம் 896 கொரோனா வைரஸ் பாதிப்புகள் உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட 200 உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய குடியேறியவர்கள். மராட்டிய மாநிலத்திலிருந்து திரும்பிய 72 பேர் கேரளாவில் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளனர், அவர்களுடன் தமிழ்நாட்டிலிருந்து 71 பேரும், கர்நாடகாவைச் சேர்ந்த 35 பேரும் உள்ளனர்.
மராட்டிய மாநிலத்திற்கு பிறகு, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக சிறப்பு ரெயில்களைக் கையாள்வது குறித்து இடதுசாரி கேரளா ரயில்வே அமைச்சகத்த்திற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளது, முன்கூட்டி தகவல் தெரிவிக்காமல் ரெயில்களை அனுப்பும் முறை கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான மாநில நெறிமுறையைத் தகர்த்துவிடும் என்று கூறியுள்ளது.
தொற்றுநோயைத் தடுப்பதில் கேரளா இதுவரை மிகச் சிறந்த வேலையைச் செய்துள்ளது – இது வெளிநாட்டு ஊடகங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது என கேரள கூறி உள்ளது.
முதலமைச்சர் பினராயி விஜயன் இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அதில் அவர்கொரோனா தடுப்பு நடவடிக்கை பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் மும்பையில் இருந்து இயக்கப்பட்ட ரெயில் கேரளாவின் கண்ணூரில் நிற்கும் என அரசுக்கு ரெயில்வே தெரிவிக்காததைச் சுட்டிக்காட்டியுள்ளார் பினராயி விஜயன்,
கொரோனா அச்சத்தால் தனிமைப்படுத்தப்படுபவர்கள் இனி அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ள அவர், வெளிநாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரும் லட்சக்கணக்கானோருக்கு செலவு செய்ய இயலவில்லை என தெரிவித்துள்ளார்.
நிதி மந்திரி தாமஸ் ஐசக், கேரளாவில் இந்த நோயை சூப்பர் ஸ்ப்ரெட்டராக மாற்ற ரெயில்வே விரும்புகிறது என்று குற்றம் சாட்டி உள்ளார்.