புதுச்சேரியில் பெட்ரோல், டீசலுக்கு கொரோனா வரி விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அன்று முதல் மதுக்கடைகளும் திறக்கப்படவில்லை. ஊரடங்கு காரணமாக பல்வேறு மாநிலங்களில் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனையடுத்து நாடு முழுவதிலும் ஊடங்கு தளர்வுகளுக்கு இடையே பல்வேறு மாநிலங்கள் தங்களின் வரி வருவாயை பெருக்கி கொள்ள மதுகடைகளை திறக்கப்பட்டன.
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மதுபானங்கள் விலையை உயர்த்தி புதுச்சேரி அரசு அரசாணை வெளியிட்டது.
இந்த நிலையில் மதுபான விலை உயர்வை தொடர்ந்து புதுச்சேரியில் பெட்ரோல், டீசலுக்கு கொரோனா வரி விதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மீது 5.75 சதவீதமும், டீசலுக்கு 3.65 சதவீதமும் வரி உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த வரி உயர்வு 3 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்று உத்தரவில் நிதித்துறை செயலர் சுர்பிர் சிங் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் பெட்ரோல், டீசலுக்கு கொரோனா வரி விதிக்கப்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பெட்ரோல், டீசல் வரியை புதுச்சேரி அரசு நாளை (மே 29) முதல் உயர்த்துகிறது.