கொரோனா தொற்று போராட்டம் : மோடிக்கு 62 சதவீதத்தினர் ஆதரவு

Spread the love

புதுடில்லி:
கொரேனா தொற்றை கட்டுப்படுத்துவதில் பிரதமர் மோடி திறமையாக கையாண்டு வருவதாக 62 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

பா.ஜ.,அரசு இரண்டாவது முறையாக பதவியேற்று வரும் 30 ம் தேதி ஓராண்டை பூர்த்தி செய்ய உள்ளது. இதனை முன்னிட்டு பா.ஜ., ஜன்கல்யாண் பர்வ் என்று ஐந்து நாள் விழாவை கொண்டாடியது. மேலும் நாடு முழுவதும் பேரணிகள் மற்றும் பல்வேறு சாதனைகைளை குறித்தும் மக்களிடையே விளக்க முடிவு செய்துள்ளது.

இதனிடையே நாடு முழுவதும் மக்களிடையே கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில் மோடி தலைமையிலான பா.ஜ.,அரசு கொரோனா தொற்றை திறம்பட கையாண்டு வருவதாக 62 சதவீதம் பேரும் ஓரளவு திறம்பட கையாண்டதாக 31 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் மோடி தலைமையிலான அரசு இரண்டாவது பதவிக்காலத்தில் வேகமாக செயல்படுவதாகவும், இந்துத்துவ வாக்குறுதிகளை நிறைவேற்றியது. முத்தலாக் சட்டத்தை கொண்டு வந்தது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது உள்ளிட்டவற்றுக்கு பெரும்பாலோனார் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page