ஐதராபாத் :
தெலுங்கானாவில் டிஎஸ்ஆர்டிசி பஸ்கள் இயக்கம் குறித்தும், கொரோனா பாதிப்பு தொடர்பாகவும் முதல்வர் சந்திரசேகர ராவ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பரவுதலை குறைக்கும் நடவடிக்கைகளில் தெலுங்கானா அரசு சிறப்பாக செயல்பட்டு பல்வேறு கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களின் பாதுகாப்பிற்காக தெலுங்கானா அரசு என்றும் பாடுபடும் என்பதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறது. தெலுங்கானாவின் நடவடிக்கைகளால் கடந்த சில வாரங்களாகவே சுமார் 25 மாவட்டங்கள் வரை நோய் பாதிப்பு இல்லாததாக காணப்படுகிறது. மேலும் ஊரடங்கின் தளர்வுகளால் பல்வேறு பொது சேவைகள் தொடர அரசு அனுமதியளித்துள்ளது. இதனால் பஸ், ஆட்டோ போன்ற பல்வேறு போக்குவரத்து சேவைகளும் தொடங்கப்பட்டு மக்கள் இயல்புநிலைக்கு திரும்பி வருகின்றனர்.
தொடர்ந்து, நேற்று பிரகதிபவனில் முதல்வர் சந்திரசேகர ராவ் கொரோனா பாதிப்பு மற்றும் மாநிலங்களின் பொருளாதார நிலவரங்கள் குறித்தும் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின் அவர் கூறுகையில், ஊரடங்கு விதிமுறைகளின் படி, ஐதராபாத் போன்ற பகுதிகளில் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும். அதை தவிர்த்து மற்ற அனைத்து இடங்களில் டிஎஸ்ஆர்டிசி (TSRTC) பஸ்கள் இயக்கப்படும். ஆனால் மாநிலங்களுக்கு இடையேயான பஸ்கள் மற்றும் பல்வேறு வெளி மாவட்டங்களுக்கான பஸ்கள் போன்றவற்றில் கட்டுப்பாடுகள் உள்ளன. மாநிலத்தில் ஊரடங்கு விதிமுறைகளை தளர்த்தியிருந்தால் நோய் பாதிப்பு குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.
வரும் காலங்களில் கொரோனா அதிகரித்து மோசமான நிலை இருந்தாலும், நோயாளிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த மாநில சுகாதாரதுறை தயார்நிலையில் இருக்க வேண்டும். மக்களும் அரசிற்கு ஒத்துழைப்பு தந்து தகுந்த பாதுகாப்பு விதிமுறைகளுடன் செயல்பட்டு நோயிலிருந்து தங்களை தற்காத்து கொள்ள வேண்டும். அதற்காக நோய் குறித்து பீதி வேண்டாம். அறிகுறிகள் கொண்டவர்களுக்கும் , நோய் தொற்றுடையவர்களுக்கும் மருத்துவர்களும் சிறந்த சிகிச்சையை அளித்து வருகின்றனர். அரசின் வழிகாட்டுதலையும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு கூறினார்.