சென்னை ராயபுரம் மண்டலத்தில் 2500-ஐ நெருங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு

Spread the love

சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2500-ஐ நெருங்குகிறது.

சென்னை

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,362 ராயபுரம் மண்டலத்தில் புதியதாக 122 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2446-ஆக உயர்ந்துள்ளது. கோடம்பாக்கம் மண்டலத்தில் 1678 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.திரு.வி.க.நகர்- 1437, தண்டையார்பேட்டை- 1425, அண்ணா நகர்- 1143

தேனாம்பேட்டையிலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1500-ஆக அதிகரித்துள்ளது. சென்னை நகரில் ஒரே நாளில் ஏழு பேர் உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கையும் 109 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 6869 பேர் குணமடைந்துள்ளனர் என கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page