ரூ.20 லட்சம் கோடி தொகுப்பு : மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பிரத்யேக பேட்டி

Spread the love

ரூ.20 லட்சம் கோடி தொகுப்பு : மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பிரத்யேக பேட்டி

சென்னை,

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது:-

மக்கள் கடுமையான சிரமத்தில் உள்ளார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் இல்லாததால் எல்லோருக்கும் ரேஷன் பொருட்களை கொண்டு செல்ல முடியவில்லை. நிபுணர்களின் ஆலோசனைபடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

முறைப்படுத்தப்பட்ட தொழிலாளர்களுக்கு தொழிலாளர் வைப்பு நிதியை அரசே கட்டும் என அறிவித்துள்ளேன். கிராமபுற விவசாய பணிகளுக்கு புலம்பெயர் தொழிலாளர்களை பயன்படுத்துவதில் நடைமுறை சிக்கல் உள்ளது. பொருளாதாரத்தை வலுப்படுத்த ரூ. 20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வங்கி கடன்களுக்கான மாத தவணை செலுத்த 6 மாத அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் கையில் பணம் சென்றடைகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page