தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 21 ஆயிரத்தை தாண்டியது

Spread the love

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியது.

சென்னை,

தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் தமிழகத்தை கொரோனா ஆட்டிப்படைத்து வருகிறது.

இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை தமிழக சுகாதார துறை வெளியிட்டுள்ளது. அதில்,

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரேநாளில் 938 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 856 பேர், பிற மாநிலங்களில் இருந்து வந்த 82 பேர் என மொத்தம் 938 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டோர் எண்ணிக்கை 20,246-ல் இருந்து 21,184 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,000-ஐ தாண்டியது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 687 பேர் கொரோனாவில் இருந்து மீண்டர். தமிழகத்தில் கொரோனாவுக்கு 9.021 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா காரணமாக தமிழகத்தில் 6 உயிரிழப்புகள் நேரிட்டன. தமிழகம் முழுவதும் பலி எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 616 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

13 – 50 வயதிற்குட்பட்ட 11,511 ஆண்கள், 6,513 பெண்கள் என மொத்தம் 18,030 பேருக்கு தொற்று உள்ளது.

தமிழகத்தில் 12 வயதிற்குட்பட்ட 1,239 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 11,313 லிருந்து 12,000 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவல் பாதிக்கப்பட்ட மாவட்டம் விவரம்:

கடலூரில் 453, தருமபுரி 8, திண்டுக்கல் 138, ஈரோடு 72, கள்ளக்குறிச்சி 244 பேர், அரியலூர் 385, செங்கல்பட்டில் 1,094, சென்னையில் 13,980, கோவையில் 146, தூத்துக்குடியில் 216, நெல்லையில் 352, திருப்பூர் 114, திருச்சி 85 பேர் வேலூர் 42 பேர். திருப்பத்தூர் 33 பேர், திருவள்ளூர் 902, தி.மலை 362, திருவாரூர் 46 பேர் என கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page