சென்னை
ஊரடங்கால் ரத்து செய்யப்பட்ட, ரயில் பயண டிக்கெட் கட்டணம் வழங்க, திருச்சி ரயில்வே கோட்டத்தில்,முக்கிய நிலைங்களில், நேற்று முதல், டிக்கெட் கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு உத்தரவால், மார்ச், 22ல் இருந்து, ஜூன், 30ம் தேதி வரை, ரத்து செய்யப்பட்ட ரயில்களில், முன்பதிவு செய்திருந்த பயணியருக்கு, முழு டிக்கெட் கட்டணமும் ரயில்வே வழங்குகிறது. பயணம் ரத்து செய்யப்பட்ட நாளில் இருந்து, 180 நாட்கள் வரை, ‘ரீபண்ட்’ கட்டணம் பெற அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி ரயில்வே கோட்டத்தில், டிக்கெட் ரீபண்ட் கட்டணம், விழுப்புரம், திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை மற்றும் அரியலுார் நிலையங்களில் உள்ள, முன்பதிவு மையங்களில், நேற்று முதல் வழங்கப்படுகிறது. முதல் கட்டமாக, மார்ச் மாதம் முழுவதும் ரத்தான ரயில்களுக்கான கட்டணம் வழங்கப்பட்டு வருகிறது.