புதுடில்லி
உலகளவில் மொபைல் போன் தயாரிப்பாளர்கள் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது என மத்திய சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது: பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் நாடு முழுவதும் 200 க்கும் மேற்பட்ட மொபைல் போன் உற்பத்தி பிரிவுகள் அமைக்கப்பட்டு உள்ளன. 2014 ம் ஆண்டில் 2 ஆலைகள் மூலம் 60 மில்லியன் மொபைல் போன்கள் தயாரிக்கப்பட்டன. அப்போதைய அவற்றின் மதிப்பு 3 பில்லியன் டாலராக இருந்தது. 2019-ம் ஆண்டில் அவற்றின் மதிப்பு 30 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. அது மட்டுமல்லாது போன் உற்பத்தி பிரிவுகளும் அதிகரித்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா ஒரு மிகப்பெரிய ஏற்றுமதியாளராக மாறி உள்ளது என எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா ட்வீட் செய்துள்ளது. மேலும் இந்திய மின்னணு துறைக்கான புதிய திட்டங்கள் குறித்து இன்று (2ம் தேதி) அறிவிக்கப்படும் என அமைச்சர் கூறினார்.