மராட்டியத்தில் நேற்று மேலும் 2,287 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மும்பை,
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து உள்ளது. நாட்டில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனினும், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. பொதுமக்கள் தங்களை காத்து கொள்ள ஊரடங்கு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது.
இந்நிலையில் மராட்டியத்தில் நேற்று மேலும் 2,287 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72,300 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இன்று ஒரே நாளில் 103 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் பலியனவர்களின் எண்ணிக்கை 2,465 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,225 பேர் குணமடைந்து திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 31,333 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.