ரூ.50 ஆயிரம் கோடியில் 3 புதிய திட்டங்கள்: மத்திய அரசு அறிவிப்பு

Spread the love

எலெக்ட்ரானிக்ஸ் பொருள் உற்பத்தியில் தன்னிறைவு அடைய, ரூ.50 ஆயிரம் கோடியில் 3 புதிய திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

மத்திய எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கடந்த 6 ஆண்டுகளில் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி வேகம் அடைந்துள்ளது. மொபைல் போன் உற்பத்தியில் உலகில் 2-வது இடத்தில் இந்தியா உள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் முதல் இடத்தை பெற இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடையவும், மொபைல் போன் உற்பத்தியில் முதல் இடத்தை பெறவும் ரூ.50 ஆயிரம் கோடியில் 3 புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் வேலைவாய்ப்பு பெருகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page