குவைத்தில் புதிதாக 877 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குவைத் சிட்டி,
குவைத் நாட்டில் புதிதாக 877 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 28,649 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6 பேரின் உயிரையும் கொரோனா பறித்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 226 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் ஏற்கனவே நோய்த்தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களா? என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.