சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு தற்போது 36 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சிங்கப்பூர்,
சிங்கப்பூரில் மேலும் 569 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 7 பேரைத்தவிர மற்றவர்கள், நெரிசலான தங்குமிடங்களில் வசித்து வரும் வெளிநாட்டு தொழிலாளர்கள் ஆவர். இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்தை தாண்டி உள்ளது. 2 மாத கால ஊரடங்கைத் தொடர்ந்து, ஆபத்து குறைந்த வர்த்தகங்கள் நேற்று முன்தினம் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில், பாதிப்பு அதிகரித்துள்ளது.