சென்னையில் நாளை முதல் இறைச்சி கடைகளை மூட உத்தரவிட்டு உள்ளது. மேலும் கொரானா அதிகம் பாதிப்புள்ள பகுதியை வெளியிட்டு உள்ளது.
சென்னையில் நாளை முதல் இறைச்சி கடைகளை மூட உத்தரவு
சென்னை மாநகராட்சி
சென்னை
சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாளை முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை சென்னையில் அனைத்து வகையான இறைச்சிக் கடைகளையும் மூடவேண்டும். உத்தரவை மீறி செயல்படும் இறைச்சி கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் வீடுகள் அமைந்துள்ள பகுதிகளின் பட்டியலை மண்டல வாரியாக பெருநகர மாநகராட்சி வெளியிட்டிருக்கிறது.
ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட பிராட்வே, ராயபுரம், புதுப்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த 10 பேருக்கு கொரோனோ உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்ணாநகர் மண்டலத்திற்கு உட்பட்ட அரும்பாக்கம், அண்ணாநகர், அமைந்தகரை, புரசைவாக்கம் பகுதிகளைச் சேர்ந்த 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட சைதாப்பேட்டை, மாம்பலம் ஆகிய இடங்களில் 6 பேரும், தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டையில் 5 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட சாந்தோம், கோடம்பாக்கத்தில் 4 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளது.