பாகிஸ்தானில் கொரோனாவால் எம்.எல்.ஏ. மரணம்

Spread the love

பாகிஸ்தானில் கொரோனாவால் எம்.எல்.ஏ. ஒருவர் மரணமடைந்தார்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் அங்கு 4,132 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 80 ஆயிரத்து 400-ஐ கடந்துள்ளது.

இந்த நிலையில் கைபர் பக்துங்வா மாகாண சட்டசபை உறுப்பினரான மியான் ஜாம்செட் காகாகேல் (வயது 65) நேற்று கொரோனா தொற்றால் மரணம் அடைந்தார். இவர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியை சேர்ந்தவர் ஆவார். இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தொற்று உறுதியானது. அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். உடல் நிலை மோமானதால் கடந்த 3 நாட்களாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் மரணம் அடைந்தார்.

நேற்று முன்தினம் சிந்து மாகாண மந்திரி கொரோனாவால் பலியானது நினைவுகூரத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page