டிரம்ப்பின் நிர்வாக திறமை இன்மையால் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்தனர் – முன்னாள் துணை அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு

Spread the love

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நிர்வாக திறமை இன்மையால் கொரோனாவால் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்தனர் என்று முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் கூறியுள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் மற்றும் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் பிலடெல்பியாவில் பத்திரிகையாளர் சந்திப்பில் ஜார்ஜ் கொலை குறித்துப் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-

நாம் ஏற்கனவே கொரோனா பாதிப்பால் மன உளைச்சலில் உள்ளோம். இந்த நிலையில் தற்போது மேலும் அதிக வலி நமக்கு வேண்டாம் நடந்து முடிந்த பிரச்சினை குறித்து விரிவாக ஆலோசனை நடத்த வேண்டும் டிரம்பின் நிர்வாகத் திறமை இன்மை மற்றும் கவனக் குறைவால் தான் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் மரணம் அடைந்துள்ளனர். டிரம்ப் என்றுமே அவருடைய தவறுகளுக்கு பொறுப்பேற்க மாட்டார். நான் அப்படிக் கிடையாது. என் செயல்களுக்கும் தவறுகளுக்கும் என்றுமே பொறுப்பேற்கும் குணம் கொண்டவன்.

டிரம்ப் அரசு வன்முறை போராட்டங்களை எப்படி சமாளிப்பது எனத் தெரியாமல் தவறான முடிவுகளை எடுத்து வருகிறது. போராட்டத்தை கட்டுப்படுத்த பிளாஷ் கிரனேட், ரப்பர் புல்லட்கள் போன்ற ஆபத்தான ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது மட்டுமல்லாமல் நிலமை மோசம் அடைந்தால் ராணுவத்தை அழைக்கப்போவதாக டிரம்ப் கூறி வருவது ஆபத்தில் கொண்டு போய் விட்டு விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page