கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு அலுவலகங்களில் சமூக விலகலை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை அனைத்து மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு கடிதம் எழுதி உள்ளது.
அதில், கொரோனா பரவுவதை தடுக்க முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அனைத்து ஊழியர்களும் அலுவலகங்களில் சமூக விலகலையும் சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் அரசு அலுவலகங்கள் திறம்பட செயல்படுவதற்கு உரிய நெறிமுறைகளை பின்பற்ற வேண்டிய பொறுப்பு ஊழியர்களுக்கு உள்ளது என்றும் அதில் கூறப்பட்டு இருக்கிறது.
இது தொடர்பாக மே 30-ந் தேதி உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவு பற்றியும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.