நாடார் இனத்தை பற்றி அவதூறாக பேசிய நபர் கைது!
தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே சலவையாளர் தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர் கடந்த சில தினங்களாகவே தனது முகநூல் பக்கத்தில் நாடார் இனத்தை பற்றியும், நாடார் பெண்களையும் பற்றியும் அவதூறாக பேசி வருகிறார். இதனை கண்டித்து பனங்காட்டு மக்கள் கழகம் மற்றும் திருச்செந்தூர் நாடார் சங்கம் சார்பாக திருச்செந்தூர் துணை கண்காணிப்பாளரான பரத் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று குற்றவாளியான மணிகண்டனை கைது செய்து சாதி கலவரம் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுத்த துணை கண்காணிப்பாளர் பரத் அவர்களுக்கு பனங்காட்டு மக்கள் கழகம் சார்பாக S A சுபாஷ் பண்ணையார் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.