கர்நாடகாவில் 7ம் வகுப்பு வரை ஆன்லைன் வழியே பாடம் நடத்த மாநில அரசு தடை விதித்து உள்ளது.
பெங்களூரு,
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவி வரும் சூழலில், கர்நாடகாவில் கடந்த 24 மணிநேரத்தில் 204 பேருக்கு புதிய தொற்றுகள் ஏற்பட்டு உள்ளன. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்து 41ல் இருந்து 6 ஆயிரத்து 245 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை 2 ஆயிரத்து 862 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர். நேற்று வரை கர்நாடகாவில் 69 பேர் கொரோனா பாதிப்புக்கு பலியாகி உள்ளனர்.
கர்நாடகாவில் ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இந்நிலையில், 5ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு, ஆன்லைன் வழியே பாடம் நடத்த தடை விதிப்பது என மாநில அரசு முடிவு செய்து இருந்தது. இந்த நிலையில், இந்த தடையை 7ம் வகுப்பு வரை நீட்டித்து உத்தரவிட்டு உள்ளது.