இந்தியாவில் கொரோனா பாதிப்பு விகிதம் 46 மாவட்டங்களிலும், இறப்பு விகிதம் 69 மாவட்டங்களிலும் அதிகமாக உள்ளது.
புதுடெல்லி
கொரோனா வைரஸ் நோய் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது, மராட்டியம், டெல்லி, தமிழ்நாடு, அரியானா, மேற்கு வங்காளம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் உத்தரபிரதேசத்தில் நிலைமை கடுமையாக உள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகத்தி தகவல்படி இந்த மாநிலங்களில் கடந்த 10 நாட்களில் அதிகமான கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளன.
டெல்லியில், தினமும் கிட்டத்தட்ட 1,300 பாதிப்புகள் பதிவு செய்யப்படுகின்றன. பதினைந்து நாட்களுக்கு முன்பு, இந்த எண்ணிக்கை 1,000 ஆக இருந்தது. வியாழக்கிழமை, தேசிய தலைநகரில் 1,877 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.
மராட்டியத்திற்கு அடுத்தபடியாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது மாநிலமான தமிழகத்தில், ஒரு நாள் உயர்வு சராசரியாக 700 முதல் 1,300 க்கும் அதிகமாக உள்ளது. நேற்று இது 1,927 கோரோனா பாதிப்புகளை பதிவு செய்தது.
அரியானாவில் வழக்குகளின் எண்ணிக்கையில் மூன்று மடங்கு அதிகரிப்பு உள்ளது. ஜம்மு-காஷ்மீரில் இந்த எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதிப்புகள் அதிகரித்து வருவதால், உத்தரவுப் பிரதேசம் இப்போது கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கையில் ஐந்தாவது இடத்தை எட்டியுள்ளது.
மே 31 வரை இந்த மாநிலம் 201 இறப்புகளைப் பதிவு செய்து இருந்தது. ஆனால் வியாழக்கிழமை, உத்தரபிரதேசத்தின் கொரோனா இறப்பு எண்ணிக்கை 321 ஐ எட்டியுள்ளது.
இந்தியாவில் 46 மாவட்டங்களில் 5.70 சதவீத தேசிய வீதத்துடன் ஒப்பிடும்போது 10 சதவீதத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகளை கொண்டுள்ளது.
கொரோனா தொற்றுநோயால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமான மராட்டியத்தில் அதிக எண்ணிக்கையில் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன அவை மும்பை, தானே, பால்கர், அவுரங்காபாத், ராய்கோட், புனே, சோலாப்பூர், நாசிக், அகோலா, ஒஸ்மானாபாத், கோண்டியா மற்றும் ஜல்கான்.
டெல்லியில், 11 மாவட்டங்களில் ஒன்பது அதிக கொரோனா பாதிப்பு வீதத்தைக் கொண்டுள்ளன அவை வடமேற்குடெல்லி, மத்தியடெல்லி, தென்கிழக்குடெல்லி, கிழக்குடெல்லி, மேற்குடெல்லி, டெல்லிவடக்கு, ஷஹ்தாரா, டெல்லிதென்மேற்கு மற்றும் டெல்லி வடகிழக்கு.
தெலுங்கானாவில் மேட்சல் மல்கஜ்கிரி, ஐதராபாத், ரங்காரெட்டி, மற்றும் சூர்யாபேட்டை ஆகிய நான்கு மாவட்டங்கள் பாதிக்கபட்டு உள்ளன.
தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் அதிக கொரோனா உறுதிப்படுத்தல் விகிதம் உள்ளது.
இதேபோல், பீகாரில் ககாரியா, பூர்பி சாம்பிரன், சீதாமாரி, முசாபர்பூர்; கார்கோன், புர்ஹான்பூர்,
மத்திய பிரதேசத்தில் நீமுச்; பிரோசாபாத், உத்தரபிரதேசத்தில் சித்ரகூட்;
அசாமில் ஹோஜாய் மற்றும் திமா ஹசாவ்;
குஜராத்தில் அகமதாபாத் மற்றும் வதோதரா;
திரிபுராவில் செபாஹிஜாலா;
உத்தரகண்ட் மாநிலத்தில் தெஹ்ரி கர்வால்; ஹவுராட்
மேற்கு வங்காளத்தில் ஹவுரா ராஜஸ்தானில் உள்ள பாலி ஆகியவை கொரோனா பாதிப்புஉறுதிப்படுத்தல் விகிதம் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ள பிற மாவட்டங்கள் ஆகும்
அதுபோல் கொரோனா பாதிப்பால் இறப்பு விகிதம் 69 மாவட்டங்களில் தேசிய விகிதத்தை விட அதிகமாக உள்ளது.
மே 18 முதல் கொரோனா மொத்த பாதிப்புகளில் 2.90 சதவீதம் தேசிய சதவீதமாகும் . 5 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட இறப்பு விகிதம் 13 மாநிலங்களில் உள்ள 69 மாவட்டங்களில் உள்ளன.
பாதிப்பு இறப்பு விகிதம் (சி.எஃப்.ஆர்) என்பது ஒரு குறிப்பிட்ட நேர வகையில் நோய் அல்லது காயம் காரணமாக இறக்கும் நோயாளிகளின் விகிதமாகும், இது இந்தியாவில் பல மேற்கத்திய நாடுகளை விட குறைவாக உள்ளது.
கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை மே 18 அன்று 100,800 ஆக இருந்தது அது ஜூன் 10 அன்று 287,155 உயர்ந்தது. இறப்புகளின் எண்ணிக்கை இந்த காலகட்டத்தில் 3,156 லிருந்து 8,108 ஆகவும் உயர்ந்து உள்ளது
மொத்த இறப்புகளில் 82 சதவீதம் மராட்டியம், டெல்லி, குஜராத் மேற்கு வங்கம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களிலிருந்து பதிவாகியுள்ளன.
நாட்டின் 69 மாவட்டங்களில் 5 சதவீதத்துக்கும் அதிகமான இறப்பு விகிதம் அதிகம் உள்ளது மத்தியப் பிரதேசம் (21), அடுத்தடுத்து உத்தரபிரதேசம் (11), குஜராத் (9), ராஜஸ்தான் (5), தெலுங்கானா (3) ஆகும்.
மத்தியப் பிரதேசம்: மண்டி, செகோர், உமரியா, மான்சூர், ராஜ்கர், சட்னா, உஜ்ஜைன், கோஷங்காபாத், புர்கான், கார்கோன், சாகர், தேவாஸ், கிழக்கு நிமர் (கண்ட்வா), ஷாஜாபூர், ரத்லம் சிந்த்வாரா, தத்யா, ராஜ்கர், வாதிகாம்கர்,ஆக்ரா மால்வா,ஜாபுவா,
உத்தரபிரதேசம்: லலித்பூர், ஜான்சி, மீரட், ஆக்ரா, அலிகார், கோரக்பூர், பிரோசாபாத், மதுரா, எட்டா, ஜலாவுன், மகோபா
மராட்டியம்: வாஷிம், நந்தூர்பார், ஜல்கான், துலே, சோலாப்பூர், அவுரங்காபாத், நாசிக், சதாரா, அமராவதி, வர்தா
குஜராத்: போர்பந்தர், பஞ்ச் மஹால், ஆனந்த், அகமதாபாத், பாவ்நகர், பாட்னா, ராஜேந்திர நகர், கட்ச், பருச்
ராஜஸ்தான்: கரவுலி, சவாய் மாதோபூர், பிரதாப்கர், ஜெய்ப்பூர், பரண்
தெலுங்கானா: நாராயண்பூர், மஞ்சேரியல், நிர்மல்
இமாச்சலப் பிரதேசம்: மண்டி, சிம்லா
மேற்கு வங்காளம்: கொல்கத்தா, 24 பர்கானாஸ் வடக்கு
டெல்லி: ஷாஹ்தாரா, வடகிழக்கு டெல்லி
அரியானா: ஜிந்த்
கர்நாடகா: தும்குரு
பஞ்சாப்: கபுர்தலா
சத்தீஸ்கார்: பஸ்தர்