பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கியது.

இஸ்லாமாபாத்,
இந்தியாவின் அண்டைநாடான பாகிஸ்தானிலும் கொடூர கொரோனா தொடர்ந்து பரவி வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 25 ஆயிரத்து 15 பேருக்கு பரிசோதனை செய்ததில், 4 ஆயிரத்து 443 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன்மூலம் கொரோனா தொற்று உள்ளோர் எண்ணிக்கை 1 லட்சத்து 48 ஆயிரத்து 919 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 111 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 839 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 56 ஆயிரத்து 390 பேர் குணமடைந்து உள்ளனர். பஞ்சாபில் 55 ஆயிரத்து 878 பேரும், சிந்து மாகாணத்தில் 55 ஆயிரத்து 581 பேரும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 663 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.