ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா போட்டியின்றி தேர்வு

Spread the love

இந்தியா,மெக்சிகோ, அயர்லாந்து, நார்வே ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டன, ஒரு இருக்கை இன்னும் உள்ளது.

ஐக்கிய நாடுகள்

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் 5 நிரந்தரமற்ற உறுப்பினர் பதவிகளுக்கு மெக்சிகோ, இந்தியா, அயர்லாந்து மற்றும் நார்வே ஆகியவை புதன்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டன,

15 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன

ஒவ்வொரு ஆண்டும் பொதுச்சபை, 5 நிரந்தரமற்ற உறுப்பினர்களை (மொத்தம் 10 பேரில்) 2 ஆண்டு காலத்துக்கு தேர்வு செய்யும். இந்த 10 இடங்களில் ஆப்பிரிக்க ஆசிய நாடுகளுக்கு 5, கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு 1, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கு 2 மற்றும் மேற்கு ஐரோப்பியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு 2 என இட ஒதுக்கீடு அமைந்துள்ளது.

இந்த ஆண்டில் 5 நிரந்தரமற்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. 2021, 2022 ஆகிய 2 ஆண்டுகளுக்கு உறுப்பினர் பதவி வகிப்பதற்கான இந்த தேர்தலில் ஆசிய, பசிபிக் பிரிவில் இந்தியா போட்டியிட்டது.

இந்தியாவின் வேட்பு மனு கடந்த ஆண்டு ஜூன் மாதம் சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட 55 உறுப்பினர்களை கொண்ட ஆசிய பசிபிக் குழுவால் ஒருமனதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் மார்ச் மாதத்திலிருந்து தூதர்கள் முககவசம் அணிந்து, சமூக தூரத்தை கடைபிடித்து பொதுச் சபை மண்டபத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களில் தங்கள் ரகசிய வாக்குகளை செலுத்தி வந்தனர்.

இந்த தேர்தலில் போட்டியிட்ட கனடா அயர்லாந்து மற்றும் நார்வேவிடம் தோற்றது, மெக்சிகோவும் இந்தியாவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டன.

புவியியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த, பிராந்திய குழுக்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. ஆனால் வேட்பாளர்கள் தங்கள் குழுவில் போட்டியின்றி போட்டியிட்டாலும், அவர்கள் ஐநா பொதுச் சபையின் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமான ஆதரவைப் பெற வேண்டும்.

புதிய உறுப்பினர்கள் தங்கள் இரண்டு ஆண்டு காலத்தை 15 உறுப்பினர்களைக் கொண்ட குழுவில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் தொடங்குவார்கள்.

ஐநா பொதுச் சபையின் 75 வது அமர்வின் தலைவராக துருக்கிய இராஜதந்திரி வோல்கன் போஸ்கிரையும் தேர்ந்தெடுத்தனர். இந்த ஆண்டின் பிற்பகுதியில் அவர் பதவி ஏற்றுக்கொள்வார்.

பொருளாதார கவுன்சில் பொருளாதாரத் தடைகளை விதிப்பது மற்றும் சக்தியைப் பயன்படுத்துவதை அங்கீகரிப்பது போன்ற சட்டபூர்வமான முடிவுகளை எடுக்கக்கூடிய ஒரே அமைப்பான் ஐநா அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய ஐந்து நிரந்தர வீட்டோ-உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page