ராஜஸ்தானில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14156 ஆக உயர்ந்துள்ளது.

ஜெய்பூர்,
சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா வைரசுக்கு இன்னும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாததால், உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் போராடி வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கியுள்ளது.
இந்தியாவின் வடமாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானிலும் கொரோனா வைரஸ் தாக்கம் கணிசமாகக் காணப்படுகிறது. இன்று ஒருநாளில் மட்டும் ராஜஸ்தான் மாநிலத்தில் 299 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14156 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தானில் கொரோனாவால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 333 ஆக உள்ளது.