கொரோனாவால் பாதிக்கப்பட்டடெல்லி சுகாதாரத்துறை மந்திரிக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படுகிறது.

புதுடெல்லி,
டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்தர் ஜெயினுக்கு (வயது 55) கடுமையான காய்ச்சல் மற்றும் உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்ததால் அவரை டெல்லியில் உள்ள ராஜீவ்காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் கடந்த 16-ந்தேதி சேர்த்தனர். மறுநாள் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதற்கிடையே அவருக்கு நிமோனியா இருப்பது நேற்று முன்தினம் தெரியவந்தது.
அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் அவரை டெல்லியில் உள்ள மேக்ஸ் என்ற தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று சேர்த்தனர். அங்கு அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது மந்திரியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அவரது உடல்நிலையில் நல்லமுன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிகிறது.