எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 4 பேர் காயம் அடைந்தனர்.

ஸ்ரீநகர்,
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் வாடிக்கையாக கொண்டுள்ளது. பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், சனிக்கிழமை பிற்பகலில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட இந்த அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் அத்துமீறிய தாக்குதலில் இந்திய தரப்பில் பொதுமக்கள் 4 பேர் காயம் அடைந்தனர்.பாகிஸ்தான் தரப்பில் சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.