கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 19 மாடி கட்டிடத்தை கட்டுமான தொழில் அதிபர் வழங்கியுள்ளார்.
மும்பை,
நாட்டிலேயே மராட்டிய மாநிலத்தில்தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் காணப்படுகிறது. மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.28 லட்சத்தை எட்டியுள்ளது. பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. மராட்டிய தலைநகர் மும்பையிலும் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது.
கொரோனாவில் இருந்து மீள மராட்டிய அரசுக்கு மக்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில், ஷீஜி ஷரன் டெவலப்பர்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தின் அதிபர் மெகுல் சங்வி என்பவர், தான் புதிதாகக் கட்டிய 19 மாடிக் கட்டிடத்தை கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக வழங்கியுள்ளார்.
மும்பையின் மலாடு பகுதியின் எஸ் வி சாலையில் அமைந்துள்ள இந்த பிரம்மாண்ட அடுக்குமாடி கட்டிடத்தில் 130 பிளாட்கள் உள்ளன. ஒரு பிளாட்டில் 4 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது வரை சுமார் 300 பேருக்கு இந்த கட்டிடத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.