மாஸ்கோவில் ராஜ்நாத் சிங் சீனப் பிரதிநிதியுடன் சந்திப்பு இல்லை – பாதுகாப்பு அமைச்சகம்

Spread the love

மாஸ்கோவில் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் சீனப் பிரதிநிதியை சந்தித்து பேசுவார் என சீன ஊடக அறிக்கையை இந்தியா மறுத்து உள்ளது.

புதுடெல்லி:

லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் கடந்த 5 ந்தேதி நடந்த வன்முறையிலிருந்து இந்தியாவும் சீனாவும் முறையாக சந்தித்து பேசவில்லை.இதைத்தொடர்ந்து எல்லையில் நிலவிய பதற்றத்தை தணிக்க இருதரப்பும் முதலில் கீழ்மட்ட ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தின. பின்னர் லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்தில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

கடந்த வாரம், வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் தனது சீன பிரதிநிதி வாங் யியுடன் லடாக் தொடர்பாக தொலைபேசியில் பெசினார்.

உரையாடலின் போது, ​​முன்னோடியில்லாத இந்த மோதல் “இருதரப்பு உறவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றும், சீனா அதன் நடவடிக்கைகளை மறு மதிப்பீடு செய்து சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாள் பயணமாக ரஷ்யா சென்று உள்ளார். மாஸ்கோவில் இன்று நடைபெறும் வெற்றி நாள் அணிவகுப்பில் கலந்து கொள்ளும் தனது சீனப் பிரதிநிதியை மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் சந்தித்துபேசுவார் என்று சீன குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. இதை தொடர்ந்து சிறிது நேரத்திலேயே இந்திய பாதுகாப்பு அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

“சீன பாதுகாப்பு மந்திரி வீ ஃபெங் இன்று மாஸ்கோவில் நடைபெறும் ரஷ்யாவின் வெற்றி நாள் அணிவகுப்பில் கலந்துகொள்கிறார்ர, மேலும் எல்லை பதற்றங்களைத் தீர்ப்பது தொடர்பாக அவரது இந்தியப் பிரதிநிதி ராஜ்நாத் சிங்குடன் ஒரு சந்திப்பை நடத்துவார் என என்று குளோபல் டைம்ஸ் டுவீட் செய்து இருந்தது.

இந்த நிலையில் இருவருக்கும் இடையில் எந்த சந்திப்பும் திட்டமிடப்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page