டெல்லியில் உள்ள தூதரக அதிகாரிகளை பாதியாக குறைக்க இந்தியா பாகிஸ்தானை கேட்டுக் கொண்டது

Spread the love

7 நாட்களில் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை பாதியாக குறைக்க இந்தியா பாகிஸ்தானைக் கேட்டுக் கொண்டு உள்ளது.

புதுடெல்லி

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ‘விசா‘ பிரிவில் அதிகாரிகளாக பணியாற்றி வந்த அபித் உசேன், முகமது தாகிர் ஆகியோர் உளவு பார்த்ததாககைது செய்யப்பட்டனர். இந்திய பாதுகாப்பு நிலைகள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிலவற்றை இந்தியர் ஒருவரிடம் இருந்து வாங்கியதை தொடர்ந்து டெல்லி போலீசார் அவர்களை கைது செய்தனர். இதற்காக அவர்கள் அந்த நபருக்கு இந்திய பணமும், ஒரு ஐபோனும் கொடுத்தனர்.

பிடிபட்டதும் அபித் உசேனும், முகமது தாகிரும் தாங்கள் இருவரும் இந்தியர்கள் என்று கூறி ஆதார் அட்டைகளையும் காட்டினார்கள். ஆனால் அந்த அட்டைகள் போலியானவை என்று தெரியவந்தது.

பின்னர், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பின் உத்தரவின் பேரில் உளவு பார்த்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். அதன்பிறகு பாகிஸ்தான் தூதரகம் கேட்டுக் கொண்டதன் பேரில் அவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து, 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறுமாறு, உளவு பார்த்த அந்த இரு அதிகாரிகளுக்கும் மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டது.

ஆனால் தங்கள் தூதரக அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கத்தில் இந்திய அரசு இப்படி செயல்படுவதாகவும் பாகிஸ்தான் கூறியது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மூத்த அதிகாரியை வரவழைத்து தனது கண்டனத்தை தெரிவித்தது.

இந்த நிலையில் பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மீதான துன்புறுத்தல்கள் மற்றும் கண்காணிப்புகள் அதிகரித்தது.

ஒரு கட்டத்தில் இந்திய தூதரக அதிகாரிகள் 2 பேர் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். இந்தியாவின் வலுவான நடவடிக்கையால் இருவரும் திரும்பினர்

மாயமான ஆளான இருவரும் பாகிஸ்தானின் உளவு அமைப்பின் காவலில் இருந்ததாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. பாகிஸ்தான் அவர்கள் சாலை விபத்தில் சிக்கியதாகவும் அத்னை ஆதரிக்க போலீசார் பதிவு செய்த எப்.ஐ.ஆரையும் காட்டியது.

இரு நாடுகளிலும் தூதரக ஊழியர்களை 50 சதவீத குறைக்கும் திட்டம் ஏழு நாட்களுக்குள் செயல்படுத்தப்பட உள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவங்களை தொடர்ந்து புதுடில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர ஊழியர்களின் பலத்தை 50 சதவீதம் குறைத்து கொள்ள வெளியுறவு தெரிவித்துள்ளதுமேலும் இதுபோல் பாகிஸ்தான் இந்திய தூதரகத்திலும் ஊழியர்கள் குறைக்கப்படுவார்கள். இந்த குறைப்பு ஏழு நாட்களுக்குள் செயல்படுத்தப்பட உள்ளது என்று அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சக வட்டார தகவல்கள் கூறியதாவது:-

பாகிஸ்தானின் தூதரக அதிகாரி வரவழைக்கப்பட்டு உளவு நடவடிக்கைகள் மற்றும் “பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புகள் ஆகியவற்றில் பாகிஸ்தான் அதிகாரிகள் குறித்து இந்தியா பலமுறை கவலைகளை வெளிப்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானின் நடத்தை வியன்னா மாநாடு மற்றும் இராஜதந்திர மற்றும் தூதரக அதிகாரிகளை நடத்தியது தொடர்பான இருதரப்பு ஒப்பந்தங்களுடன் ஒத்துப்போகவில்லை. மாறாக, இது எல்லை தாண்டிய வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் ஒரு பெரிய கொள்கையின் உள்ளார்ந்த அமைப்பாக இருக்கிறது.

இரண்டு இந்திய அதிகாரிகளின் துப்பாக்கி முனையில் அண்மையில் கடத்தப்பட்டதும், அவர்களின் கடுமையான மோசமான நடத்தப்பட்டது பாகிஸ்தான் அந்த திசையில் எந்த அளவிற்கு சென்றது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என கூறி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page