சென்னையில் 59 சதவீதம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்

Spread the love

சென்னையில் 59 சதவீதம் பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.


சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் ஆயிரத்தை தாண்டியே பதிவாகி கொண்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த சென்னையில் வருகிற 30-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

சென்னையில் இதுவரை 47 ஆயிரத்து 650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், குணமடையும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே வருகிறது.

இந்நிலையில், சென்னையில் இதுவரை 27 ஆயிரத்து 986 பேர் குணம் அடைந்துள்ளனர். அதாவது மொத்த பாதிப்பில் 59 புள்ளி 03 சதவீதம் பேர் குணம் அடைந்து உள்ளனர். சென்னையில் இதுவரை 694 பேர் உயிரிழந்துள்ளனர். இது மொத்த பாதிப்பில் 1.5 சதவீதம் ஆகும். 18 ஆயிரத்து 969 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இது மொத்த பாதிப்பில், 39 புள்ளி 5சதவீதம் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page