கொரோனா வைரஸ் பரவல் தடுக்க அசாமில் இரவு நேர ஊரடங்கு

Spread the love

கவுகாத்தி நகரம் அடங்கிய காம்ருப் (மெட்ரோ) மாவட்டம் முழுவதும் 14 நாட்கள் முழுமையான ஊரடங்கு போடப்பட்டு, அதுவும் நேற்று நடைமுறைக்கு வந்துள்ளது.


கவுகாத்தி,

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பதற்காக தற்போது மாநில அரசுகள், தங்கள் மாநில நிலவரத்துக்கு ஏற்ப ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்துகின்றன. அந்த வகையில் அசாமில் மாநிலம் முழுவதும் இரவு நேர (12 மணி நேரம்) ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது நேற்று இரவு 7 மணி முதல் அமலுக்கு வந்துள்ளதாக அந்த மாநில சுகாதார மந்திரி ஹிமாந்த பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.

மேலும், கவுகாத்தி நகரம் அடங்கிய காம்ருப் (மெட்ரோ) மாவட்டம் முழுவதும் 14 நாட்கள் முழுமையான ஊரடங்கு போடப்பட்டு, அதுவும் நேற்று நடைமுறைக்கு வந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களின் நுழைவு வாயிலாக பார்க்கப்படக்கூடிய கவுகாத்தியில் கடந்க 15-ந் தேதியில் இருந்து கொரோனா பரவல் வேகம் எடுத்து 762 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 677 பேருக்கு பயண தொடர்புகள் இல்லை. பிற மாநிலங்களில் இருந்து திரும்பியுள்ளவர்கள் மூலமே தொற்று பரவுவதாக சுகாதார மந்திரி ஹிமாந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

7 நாட்களுக்கு பின்னர் கவுகாத்தியில் ஊரடங்கு நிலவரம் குறித்து ஆய்வு செய்யப்படும் எனவும் அவர் கூறினார். அசாமில் கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 6,646 ஆக உள்ளது. 4,033 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 2,601 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். 9 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page