மாஜிஸ்திரேட்டின் அதிர்ச்சி அறிக்கை வெளியான நிலையில் விசாரணை திவீரம் அடைந்துள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி சாத்தான்குளத்தில் பென்னிக்ஸும் அவரது தந்தை ஜெயராஜும் செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததால் வந்த விவகாரத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் காயங்களுடன் கோவில்பட்டி கிளைச்சிறையில் அனுமதிக்கப்பட்டதில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டதில் இருவரும் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த இருவர் மரணத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கண்டித்தன. இந்த சம்பவம் தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவின் படி, சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
அரசு கட்டுப்பாட்டிலிருந்த நிலையில் சந்தேக மரணம் என சிபிசிஐடி வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. ஐ.ஜி. தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் சிபிசிஐடி எஸ்.பி. விஜயகுமார், டிஎஸ்பி அனில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பான அனைத்து இடங்களுக்கும் சென்று சிபிசிஐடி அதிகாரிகள் இன்று விசாரணை நடத்த உள்ளனர்(சாத்தான்குளம் காவல்நிலையத்தில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் இன்று காலை மீண்டும் விசாரணை நடத்துகிறார். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 2ஆவது நாளாக தடய அறிவியல் துறை நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்து வருகின்றனர்