கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் சார்பில் பெண்களுக்கான தனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் உஸ்மா கர்தார்.

இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த பெண் எம்.எல்.ஏ. உஸ்மா கர்தார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் சார்பில் பெண்களுக்கான தனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் அரசில் ராணுவத்தின் ஆதிக்கம் அதிகரித்து வருவது குறித்தும், பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவரது 3-வது மனைவியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் உஸ்மா கர்தார் அவதூறாக பேசும் ஆடியோ பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைமை உஸ்மா கர்தாரை நேற்று கட்சியில் இருந்து நீக்கியது.