அமெரிக்க ராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.

பாக்தாத்,
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.
இதன் காரணமாக ஈராக்கை சேர்ந்த ஈரான் ஆதரவு பயங்கரவாத அமைப்புகள் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மற்றும் அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து தொடர்ந்து ராக்கெட் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகின்றன. அந்த வகையில் தலைநகர் பாக்தாத்தில் பசுமை மண்டலத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது பல முறை ராக்கெட்டுகள் வீசப்பட்டு உள்ளன. இந்த நிலையில் பயங்கரவாதிகளின் ராக்கெட் தாக்குதலை சமாளிக்கும் விதமாக பசுமை மண்டலத்தில் உள்ள அமெரிக்க படைகள் நேற்று முன்தினம் இரவு அமெரிக்காவின் வான் பாதுகாப்பு அமைப்பை சோதித்து பார்த்தன. இந்த சோதனை நடந்த சில மணி நேரங்களுக்குள் அதாவது நேற்று அதிகாலை அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் ராக்கெட் ஒன்றை வீசினர். ஆனால் அமெரிக்க வான் பாதுகாப்பு படை அந்த ராக்கெட்டை நடு வழியிலேயே இடைமறித்து தாக்கி அழித்தது.
இதில் ராக்கெட்டின் சிதைவுகள் அமெரிக்க தூதரகத்துக்கு அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் நுழைந்தது. இதில் பச்சிளம் குழந்தையொன்று படுகாயம் அடைந்து.