ஆஸ்திரேலியாவில் 2-வது கொரோனா அலை: ஆறு வாரங்களுக்கு ஊரடங்கு

Spread the love

ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மெல்போர்னில் 6 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவை அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ளது.


சிட்னி,

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வியாபித்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளே கொரோனாவை கட்டுப்படுத்த வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது.

கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால், சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது ஆகியவற்றின் மூலமே கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் என்று உலாக் சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது.

எனினும், நகரங்களில் அடர்த்தியான மக்கள் தொகை, போதிய ஒத்துழைப்பு இன்மை ஆகிய காரணங்களால் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

ஐரோப்பிய நாடுகளில் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டாலும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் கொரோனா உக்கிர தாண்டவம் ஆடி வருகிறது. இந்த நிலையில், உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,17,32,169- ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,40,119- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இருந்து 6,623,954- குணமடைந்துள்ளனர்.

இந்தநிலையில் கொரோனா வைரஸ் தொற்று அமெரிக்கா, இத்தாலி நாடுகளில் பரவியதைப் போலவே, ஆஸ்திரேலியாவிலும் மிகவும் வேகமாகப் பரவியது. அங்கு பிறப்பிக்கப்பட்ட கடுமையான ஊரடங்கு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளால், கடந்த மே மாத இறுதியில், கொரோனா பரவல், 75 சதவீதம் கட்டுக்குள் வந்தது. இதனால், ஆஸ்திரேலியா முழுவதும் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு, கடந்த 10 நாள்களுக்கு முன் தளர்த்தப்பட்டது மக்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மெல்போர்னில், கொரோனா பரவல் உச்சத்தை எட்டியுள்ளது. மார்ச் மாதம் முதல் எப்போதும் இல்லாதவகையில் கடந்த நேற்று ஒரே நாளில், 191 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

‘ஆஸ்திரேலியாவில் இதுவரை, 8,755 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 106 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், ஊரடங்கு தளர்வால், கொரோனாவின் இரண்டாவது அலை உருவாக வாய்ப்புள்ளதாக அந்நாட்டு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதைத்தடுக்க, அடுத்து வரும் ஆறு வாரங்களுக்கு மெல்போர்னில் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது என, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

நேற்று (7ம் தேதி) நள்ளிரவு துவங்கும் இந்த ஊரடங்கில், மக்கள் வீட்டை விட்டு வெளியேறவும் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா மாகாணத்திலும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், கடந்த 100 ஆண்டுகளில் முதன்முறையாக, விக்டோரியா மற்றும் மெல்போர்ன் மாகாணங்களின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இதற்கு முன், கடந்த 1919ல் ஆஸ்திரேலியாவில் ஸ்பானிஸ் புளூ பரவியபோது இந்த மாகாணங்களின் எல்லைகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page