சீனாவுடனான மோதலில் இந்தியாவின் பக்கம் அமெரிக்க ராணுவம் நிற்கும்வெள்ளை மாளிகை சூசக தகவல்

Spread the love

சீனாவுடனான மோதலில் இந்தியாவின் பக்கம் அமெரிக்க ராணுவம் நிற்கும் என்று வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி சூசகமாக தெரிவித்தார்.


வாஷிங்டன்,

அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி மார்க் மீடோஸ், ஒரு செய்தி சேனலுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அவரிடம், இந்தியா-சீனா இடையிலான மோதல் பற்றி கேட்கப்பட்டது.

அதற்கு அவர் கூறியதாவது:-

ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திக் கொள்கிறோம். உலகத்தில் சீனாவோ, மற்ற நாடுகளோ தாங்கள்தான் சக்திவாய்ந்தவர் என்று சொல்லிக்கொண்டு, பிற நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்க மாட்டோம். எந்த பிராந்தியத்திலும் இதை அனுமதிக்க மாட்டோம்.

சீனாவாக இருந்தாலும், அல்லது வேறு எந்த நாடாக இருந்தாலும் அந்த நாட்டை ஆதரிக்க மாட்டோம்.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டாலும் நட்புறவின் (இந்தியா) பக்கம் அமெரிக்க ராணுவம் நிற்கும். அமெரிக்க ராணுவம் தொடர்ந்து வலுவாக நிற்கும்.

தெற்கு சீன கடல் பகுதிக்கு 2 விமானம் தாங்கி கப்பல்களை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. உலகிலேயே அமெரிக்காதான் இன்னும் வலுவான சக்தி என்பதை உலகம் அறிந்து கொள்வதற்காக இதை செய்கிறோம்.

அமெரிக்க ராணுவத்துக்கு ஜனாதிபதி டிரம்ப் நிறைய முதலீடு செய்துள்ளார். அமெரிக்க ராணுவ வீரர்களும், வீராங்கனைகளும் தினந்தோறும் தியாக உணர்வுடன் பணியாற்றி வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page